கைதிகளாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே – உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற ராமதாஸ்!!
கைதிகளாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே – உச்சநீதிமன்ற தீர்ப்பை வரவேற்ற ராமதாஸ்!!
சீனாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கு பரவியிருக்கும் கொரோனா நோய்த் தொற்று இந்தியாவிலும் பரவி வருகிறது.
நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350 ஐ நெருங்குகிறது. இதில் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் இப்போது மேலும் இருவருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொரோனா நோய் தொற்றைத் தடுக்க 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்ற கவிதைகளை 6 வார பரோல் அல்லது ஜாமீனில் விட உச்ச நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து, பாமக நிறுவனர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
கொரோனா நோய்த் தொற்றை தடுக்க 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை பெற்ற கைதிகளை 6 வார பரோல் அல்லது ஜாமினில் விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கைதிகளாக இருந்தாலும் அவர்களும் மனிதர்களே என்ற பார்வை உன்னதமானது! #CoronaVirus #LockDownTNnow என உச்ச நீதிமன்றத்தின் ஆணையை வரவேற்றுள்ளார்.
மேலும், அவர், தனது மற்றோரு டுவிட்டர் பதிவில், கொரோனா நோயால் ஒருவர் கூட தமிழகத்தில் உயிரிழக்கக்கூடாது என்பது தான் தமிழக அரசின் விருப்பம் ஆகும்- முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி:உங்கள் நோக்கம் பாராட்டத்தக்கது தான். ஆனால், உடனடியாக 3 வார முழு அடைப்பை அறிவித்தால் மட்டுமே அந்த நோக்கம் நிறைவேறும்! #CoronaVirus #LockDownTNnow என தெரிவித்துள்ளார்.