ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 23 மார்ச் 2020 (18:07 IST)

வெளிய சுத்துனா பாஸ்போர்ட் BLOCK: கறார் காட்டும் தமிழக அரசு!

வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்  என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
உலகமெங்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா நான்கு கட்டங்களாக பரவும் என கூறப்பட்டு வரும் நிலை தமிழகத்தில் கொரோனா இரண்டாம் கட்டத்தில் உள்ளதாக தெரிகிறது. 
 
உள்நாட்டு பரவல் பரவல் என்பது தான் கொரோனா பரவலின் இரண்டாம் கட்டம். இந்த கட்டத்தில், வெளி நாடுகளில் இருந்து வந்த நபர்களின் மூலமாக உள்நாட்டில் நோய் பரவும். எனவே, இதை தடுக்க கடந்த ஒரு மாதத்திற்குள் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. 
 
இதனையும் மீறி வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்கள் வெளியே நடமாடினால் பாஸ்போர்ட் முடக்கப்படும்  என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.