புதுச்சேரியில் அமலுக்கு வந்தது குடியரசு தலைவர் ஆட்சி!
புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்த நிலையில் அவரது ராஜினாமா குடியரசுத் தலைவரால் ஏற்கப்பட்டது என்பது தெரிந்ததே
இந்த நிலையில் எதிர்க்கட்சிகளும் புதுச்சேரியில் ஆட்சி அமைக்க விரும்பவில்லை என அறிவித்ததை அடுத்து புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது
இந்த நிலையில் சற்று முன்னர் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வருவதாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
புதுச்சேரியில் அரசு கலைக்கப்பட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல் என்றும் அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. புதுச்சேரியில் இன்னும் தேர்தல் நடைபெற மூன்று மாதங்கள் இருக்கும் நிலையில் மூன்று மாதங்களுக்கும் குடியரசு தலைவர் ஆட்சியே அமலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது