தேமுதிகன்னா சும்மாவா? வெயிட் பண்ணுங்க சொல்றோம்: பிரேமலதா விஜயகாந்த் தடாலடி!!
கூட்டணி தொடர்பான முடிவுகள் விரைவில் வெளியிடப்படுமென பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்துவிட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தேமுதிகவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் இழுபறி ஏற்பட்டுள்ளது.
ஆனால் தேமுதிக தரப்பில் பத்து தொகுதிகளில் பிடிவாதமாக இருந்ததாகவும் குறைந்தபட்சம் பாமகவுக்கு கொடுத்த ஏழு தொகுதிகளாவது வேண்டும் என்று வலியுறுத்தியதால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இந்நிலையில் கூட்டணி குறித்து பிரேமலதா கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேமுதிக அதிக வாக்கு வங்கி உடைய கட்சி, எங்களின் பலம் எங்களுக்கு தெரியும். ஆகவே கூட்டணி குறித்து இன்னும் ஒரு வாரத்தில் கேப்டன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடுவார் என தெரிவித்தார்.