வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 17 ஜனவரி 2019 (20:30 IST)

மருத்துவர்களின் அலட்சியத்தால் கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு !

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதிக்கு அருகே வசித்து வருபவர் ராஜேந்திரன். இவருக்கு கீர்த்தனா என்ற மனைவி உள்ளார்.  இவரது இரண்டாவது பிரசவத்துக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அப்போது மருத்துவமனையில் கீர்த்தனாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் கீர்த்தனாவிற்கு ரத்தப்போக்கு ஏற்பட்டது. இதற்கு மருத்துவமனி நிர்வாகம் கீர்த்தனாவின் கர்ப்பப் பையை அகற்றினால்தான் ரத்தப்போக்கு சரியாகும் என்று தெரிவித்தனர். இதனை கணவர் ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் ஒப்புக்கொண்ட பின்னர் கர்ப்பப் பையை அகற்றிய பிறகும் ரத்தப்போக்கு நிற்கவில்லை. 
 
இதனையடுத்து கீர்த்தனா கணவன் கண் முன்னர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மருத்துவமனையில் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
 
இந்நிலையில் கீர்த்தனாவில் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. இதற்கு தக்க நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகிறது.