1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 15 ஜனவரி 2019 (09:41 IST)

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்வு; வாகன ஓட்டிகள் கலக்கம்!!

பெட்ரோல் டீசல் விலை தொடர்ச்சியாக 6வது நாளாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்த பிறகு கடந்த வருட முடிவில் கச்சா எண்ணெய் உயர்வு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் விலை வீழ்ச்சி ஆகியக் காரணங்களால் பெட்ரோல் டீசல் விலை வரலாறு காணாத அளவில் விற்பனை ஆனது.  இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கடும் துன்பத்தை அனுபவித்தனர். 
 
5 மாநில தேர்தலையொட்டி, பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டதையடுத்து பெட்ரோல், டீசல் விலை அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.
 
இந்நிலையில் இன்று சென்னையில் பெட்ரோல் விலை 29 காசுகள் அதிகரித்து ரூ.73.08 க்கும், டீசல் ஒரு லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.68.09 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.