1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 நவம்பர் 2019 (09:02 IST)

திடீர் திருப்பம்: பிரசாந்த் கிஷோர் யாருக்கு வேலை செய்ய போகிறார் தெரியுமா?

தேர்தலில் வெற்றி பெற வாக்காளர்களிடம் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்கும் காலம் போய், தற்போது கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆலோசனைப்படி தேர்தலில் வெற்றிபெற அரசியல் கட்சிகள் புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றன
 
கடந்த 2014 ஆம் ஆண்டு அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை கூறும் பிரசாந்த் கிஷோரின் ஆலோசனைப்படி பிரதமர் மோடி தேர்தலை சந்தித்தால் அவர் பிரதமர் ஆனார் என்று கூறப்படுகிறது. அதேபோல் பல மாநில சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றபோது பிரசாந்த் கிஷோர் அம்மாநிலங்களில் அரசியல் கட்சிகளுக்கு ஆலோசனை கூறி உள்ளதாகவும் அவர் ஆலோசனை கூறிய அரசியல் கட்சிகள் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து உள்ளதாகவும் செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தன
 
இந்த நிலையில் தமிழகத்தில் வரும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பிரசாந்த் கிஷோரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அணுகினர். கமலஹாசன், எடப்பாடிபழனிசாமி, ரஜினிகாந்த் ஆகியோர்கள் தரப்பிலிருந்து பிரசாந்த் கிஷோரை சந்திப்பது சட்டமன்ற தேர்தலுக்கு ஆலோசனை கூறுமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள புதிய தகவலின்படி திமுகவுக்கு பிரசாந்த் கிஷோர் வேலை செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்துள்ளது. திமுகவில் உள்ள ஒரு முக்கிய பிரமுகர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து திமுகவுக்கு பணி செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும் ஆழ்ந்த ஆலோசனைக்குப் பின்னர் பிரசாந்த் கிஷோர் ஒப்புக் கொண்டதாகவும் கூறப்படுகிறது 
 
வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி ஒருபுறம், கமல்ரஜினி கூட்டணி ஒருபுறம் என இரண்டு பெரிய கூட்டணிகளை சமாளித்து ஆட்சியை பிடிக்க வேண்டுமென்றால் கார்ப்பரேட் நிறுவனங்களில் உதவி தேவை என்று திமுக முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது