Daily Horoscope
✕

இது துரோகம் இல்லையா?.. முழுக்க சுயநலம்!.. திமுகவை திட்டிய பிரகாஷ்ராஜ்...

Updated: சனி, 28 நவம்பர் 2026 (18:24 IST)
பாஜக அரசு கொண்டு வந்துள்ள தொகுதி மறுவரையறை மசோதாவை திடீரென திமுக ஆதரித்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு இந்த மசோதாவை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த போது அதை திமுக கடுமையாக எதிர்த்தது.

ஆனால் தற்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்கிற உத்தரவாதத்தை பாஜக அரசு கொடுத்துள்ளதால் திமுக அரசு இதை ஏற்பதாக அறிவித்துள்ளது. இதையடுத்து திமுகவின் முடிவுக்கு திக தலைவர் வீரமணி, விடுதலை சிறுத்தை திருமாவளவன், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல அரசியல் கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், திமுகவை ஆதரித்து வந்த நடிகர் பிரகாஷ்ராஜ் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் ‘தொகுதி மறுவரையறை மசோதாவின் பாதிப்புகளை மக்களிடம் சொன்ன திமுக தற்போது அதற்கு ஆதரவு அளிப்பது மக்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைப்பது போல் ஆகிவிடும். இது சுயநலமான முடிவாகவே பார்க்க முடியும். ஒட்டுமொத்த மக்களின் நலனையும் பாதிக்கக்கூடிய இத்தகைய முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த முடிவின் அடிப்படையில் எதிர்கால தலைமுறை உங்களை எவ்வாறு மதிப்பிட வேண்டும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள்’ என திமுக தலைவர் ஸ்டாலினிடம் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.<>
About Author
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More

எல்லாம் காட்டு

தொகுதி மறுவரை!.. தமிழ்நாட்டுக்கு எவ்வளவு எம்.பி-க்கள்?..

இனிமே TV-யிலும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்க்கலாம்!.. புதிய வசதி அறிமுகம்...

திருப்பரங்குன்றத்தில் 20 பேருக்கு மட்டுமே அனுமதி.. இந்து அமைப்பினர் வாக்குவாதம்..

தவெகவில் அடுத்த சர்ச்சை. குடும்ப வன்முறை புகாரில் அமைச்சர் வெங்கட்ரமணன்...

ரூ.500 வரைக்கும் SMS அலார்ட் இல்லை!.. UPI விதிகளில் மாற்றம்...

அடுத்த கட்டுரையில்
Show comments