Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் தபால் வாக்குப்பதிவு தொடக்கம்! வீட்டுக்கே சென்று வாக்கு சேகரிப்பு..!

Written By Mahendran
Updated: வியாழன், 4 ஏப்ரல் 2024 (11:40 IST)
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று முதல் தபால் வாக்குகள் பதிவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தேர்தல் பணி செய்பவர்களுக்கு தபால் வாக்குகள் இருக்கும் நிலையில் இன்று முதல் தபால் வாக்குகள் பதிவு செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களின் வீட்டுக்கே சென்று தபால் வாக்கு பெறும் பணி தொடங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி இன்று தொடங்கப்பட்டாலும் இந்த வாக்குகள் ஜூன் நான்காம் தேதி தான் எண்ணப்படும்  என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகம் முழுவதும் தபால் வாக்குகள் பதிவு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளதை அடுத்து தபால் வாக்குகள் உள்ள வாக்காளர்கள் தங்களுடைய ஜனநாயக கடமையை பொறுப்புடன் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Edited by Mahendran

எல்லாம் காட்டு

உதயநிதி கைது எதிரொலி.. தவெக கொடியை கீழே போட்டு மிதித்த திமுகவினர்

உதயநிதி கைது விவகாரம்.. சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி..

அனிதா ராதாகிருஷ்ணன் விவகாரத்தில் அரை மணிநேரத்தில் பேசிய கனிமொழி, இப்போதைய மெளனம் என்ன சொல்கிறது?

திரிஷா என்ன பிரதமரா?!.. நாங்க அப்படித்தான் பேசுவோம்!.. ஆர்.எஸ்.பாரதி பேட்டி!..

உதயநிதி கைது எதிரொலி!.. நடிகை நிவேதா பெத்துராஜ் போட்ட பதிவு...

அடுத்த கட்டுரையில்
Show comments