பூந்தமல்லி துணிக்கடையில் 50 ஊழியர்களுக்கு கொரோனா! - சென்னையில் அதிர்ச்சி

Prasanth Karthick| Last Modified வியாழன், 16 ஜூலை 2020 (11:39 IST)
சென்னை பூந்தமல்லியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணிபுரியும் 50 ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு ஒன்றரை லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் சென்னையில் மட்டுமே 70 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. சமீப காலமாக முழு முடக்கம், கடுமையான கட்டுபாடுகள் முதலானவற்றை சென்னை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வந்ததன் விளைவாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய தொடங்கியுள்ளது.

இந்நிலையில் சென்னை பூந்தமல்லியில் உள்ள துணிக்கடை ஒன்றில் பணி புரியும் ஊழியர் ஒருவருக்கு கொரோனா இருப்பதாக தெரிய வந்துள்ளது. சுமார் 100 ஊழியர்கள் பணிபுரியும் அந்த துணிக்கடையில் உள்ள 60 ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 50 பேருக்கு கொரோன உறுதியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர்கள் மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில், துணிக்கடையும் அதிகாரிகள் மூடியுள்ளனர்.இதில் மேலும் படிக்கவும் :