25 ஆயிரத்தை நெருங்கும் பலிகள்; 9.68 லட்சம் பாதிப்புகள்! – இந்திய நிலவரம்!

India
Prasanth Karthick| Last Modified வியாழன், 16 ஜூலை 2020 (10:02 IST)
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் உலக அளவில் பாதிப்பில் ரஷ்யாவை தாண்டி மூன்றாவது இடத்தை அடைந்துள்ளது இந்தியா.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஐந்து கட்ட ஊரடங்குகளும் முடிந்து விட்ட நிலையிலும் கொரோனா பாதிப்புகள் பல மாநிலங்களிலும் அதிகமாக உள்ளது. இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் 9 லட்சம் பாதிப்புகளை இந்தியா தாண்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே நாளில் 31 அயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 9,68.876 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 24,915 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 6,12,815 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,75,640 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10,928 பேர் பலியான நிலையில் 1,52,613 பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் 1,51,820 ஆக உள்ள நிலையில் 2,167 பேர் பலியாகியுள்ளனர். 1,02,310 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியல்.

டெல்லி – 1,16,993
கர்நாடகா – 47,253
குஜராத் – 44,552
உத்தர பிரதேசம் – 41,383
தெலுங்கானா – 39,342
மேற்கு வங்கம் – 34,427
ராஜஸ்தான் – 26,437
ஹரியானா – 23,306
மத்திய பிரதேசம் – 19,643இதில் மேலும் படிக்கவும் :