1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 7 ஜனவரி 2022 (20:11 IST)

பொங்கல் தொகுப்பில் பொருட்கள் குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?

ரேசன் அரிசி அட்டைதாரர்களுக்கு தற்போது பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த பரிசு தொகுப்பில் ஒரு சில பொருட்கள் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது 
 
இதனை அடுத்து பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்கள் குறைவாக இருந்தால் 18005993540 என்ற எண்ணக்கும் துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தெரிவித்துள்ளார்
 
அனைத்து ரேஷன் கடைகளிலும் முறையாக பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றும் 21 பொருள்களும் சரியாக இருக்கிறதா என்பதை பொதுமக்கள் சரிபார்த்து வாங்க வேண்டும் என்றும் ஒருவேளை குறைவாக இருந்தால் உடனடியாக என்ற 18005993540 எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்றும் அந்த புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்