திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2023 (11:42 IST)

ஆயிரம் கோடியை தாண்டும் வசூல்? பொங்கல் டாஸ்மாக் விற்பனை!

பொங்கலையொட்டி தமிழக டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்டியுள்ள நிலையில் விழாக்கால வசூல் ஆயிரம் கோடியை தொடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் காரணமாக இன்று வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கலை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தொடர் விடுமுறை என்பதால் கடந்த வெள்ளிக்கிழமை முதலாகவே டாஸ்மாக் கடைகளில் விற்பனை களைகட்ட தொடங்கியுள்ளது.

வெள்ளி, சனிக்கிழமைகளில் இருந்த விற்பனையை விட பொங்கல் அன்று ஞாயிற்றுக்கிழமை அதிக மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. நேற்று திருவள்ளுவர் தினத்தையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டிருந்ததால் முதல் நாளே பலரும் மொத்தமாக மதுபானங்களை வாங்கியதாக தெரிகிறது.

மொத்தமாக கடந்த 4 நாட்களுக்குள் மதுபான விற்பனை ரூ.800 கோடியை தொட்டிருக்கலாம் என்றும், இன்றைய விற்பனையை சேர்ந்து ரூ.1000 கோடியை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ வசூல் நிலவரத்தை டாஸ்மாக் நிர்வாகம் விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Edit By Prasanth.K