ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: திங்கள், 16 ஜனவரி 2023 (22:10 IST)

கோ பூஜை செய்தால் இவ்வளவு நன்மைகளா?

Mattu Pongal
ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப்பொங்கல் தினத்தின் போது கோ பூஜை செய்வது இந்துக்களின் வழக்கமாக உள்ளது. 
 
கோ பூஜை செய்தால் பிறவி பிணி தீரும் என்பதால் இந்துக்களில் பலர் இந்த கோ பூஜை செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்துக்கள் பசுவை வணங்குவதை பெரும் புண்ணியமாக பல நூற்றாண்டுகளாக கருதி வருகின்றனர் என்பதும் கோமாதா என்று பசுவை பெருமையுடன் அழைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கோபூஜை செய்தால் கோடி நன்மை கிடைக்கும் என்றும்  மாட்டுப்பொங்கல் தினத்தில் கோ பூஜை செய்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
 
மாட்டு பொங்கல் தினத்தில் பசுவை வீட்டிற்கு அழைத்து வந்து மஞ்சள் குங்குமம் வைத்து மலர்களால் அலங்காரம் செய்து நெய்விளக்கு ஏற்றி பசுவை மூன்று முறை சுற்றி வர வேண்டும் என்பது ஐதீகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran