1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 11 டிசம்பர் 2020 (08:01 IST)

பொங்கல் பண்டிகைக்கான சிறப்பு பேருந்துகள்: இன்று முதல் முன்பதிவு!

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையின்போது சொந்த ஊர் செல்பவர்கள் ரயில்கள் மற்றும் பேருந்துகளில் இரண்டு மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்துவிடுவது வழக்கம். அந்த வகையில் ஏற்கனவே ரயில்களுக்கு பொங்கல் விடுமுறை காண முன்பதிவுகள் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இன்றுமுதல் அரசு பேருந்துகளில்  பொங்கல் பண்டிகை விடுமுறைக்கான முன்பதிவு தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
அடுத்த ஆண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகை விடுமுறை ஆரம்பமாக இருப்பதை அடுத்து இன்று முதல் அரசு பேருந்துகளில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு தொடங்கு படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. பொங்கல் பண்டிகை விடுமுறை வியாழக்கிழமை முதல் தொடங்குவதால் வியாழன் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய 4 நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது
 
இதனை பயன்படுத்தி சென்னையில் பணிபுரியும் தென் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்  இன்று முதல் முன்பதிவு செய்து தங்களது பயணத்தை உறுதி செய்து கொள்ளலாம். கடைசி நேர பரபரப்பு தவிர்ப்பதற்காக அனைவரும் முன்கூட்டியே முன்பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது