வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (19:48 IST)

புரெவி புயல் முன்னெச்சரிக்கை: 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை

வங்க கடலில் உருவாகிய புரெவி புயல் நேற்று இரவு இலங்கையை கரை கடந்த நிலையில் இன்று பாம்பன் மற்றும் கன்னியாகுமரி இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
 
இந்த நிலையில் புரெவி புயல் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மதுரை உள்பட தென்மாவட்டங்களில் மிக கனமழை பெய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலைய்ல் சற்றுமுன் தமிழக அரசு புரெவி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை என அறிவித்துள்ளது. இதன்படி கன்னியாகுமரி நெல்லை தென்காசி இராமநாதபுரம் விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் நாளை அதாவது நவம்பர் 4ஆம் தேதி பொது விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது