Daily Horoscope
✕

பொங்கல் டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?

Written By Mahendran
Updated: செவ்வாய், 4 ஜனவரி 2022 (09:47 IST)
பொங்கல் தொகுப்பு டோக்கன் கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தமிழக அரசு தெரிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இன்று முதல் பொங்கல் தொகுப்பு பொருள்கள் வழங்கப்பட உள்ளன என்பதும் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று இதனை ஆரம்பித்து வைக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
ஏற்கனவே அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டுள்ள நிலையில் அந்த டோக்கனை குறிப்பிடப்பட்டுள்ள நேரம் மற்றும் தேதியின்படி பொங்கல் தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் பொங்கல் தொகுப்பு பெறாதவர்கள் வரும் பத்தாம் தேதி பின்னர் டோக்கன் பெற்று அதன் பின்னர் பொங்கல் தொகுப்பு பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
 
அதேபோல் டோக்கன் பெற்றவர்கள் எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் தொகுப்பு பொருட்களை பெற முடியவில்லை என்றாலும் பத்தாம் தேதிக்கு பின்னர் அவர்கள் வந்து பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது
 

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments