அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் எவ்வளவு? தமிழக அரசு அறிவிப்பு
ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பொங்கல் போனஸ் அறிவிப்பது வழக்கம். அரசு ஊழியர்களின் பதவியை பொருத்து இந்த போனஸ் தொகை வேறுபடும்
இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சி மற்றும் டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் போனஸ் என்றும், தற்காலிக ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் போனஸ் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளாட்சி அமைப்புகள், அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் பல்கலைக் கழக மானியக் குழு / அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு / இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் ஆகியவற்றின் கீழ் சம்பள விகிதம் பெறுபவர்கள், அனைத்திந்தியப் பணி விதிமுறைகளின் கீழ் சம்பளம் பெறுபவர்கள் ஆகியோருக்கும் இந்த மிகை / சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.