கீழ்த்தரமாக நடந்துகொள்ளும் விவசாயிகள்!!! வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் பொன்னார்
டெல்லியில் தமிழக விவசாயிகள் நடத்திய நிர்வாணப் போராட்டம் கடும் கண்டனத்திற்குரியது என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருப்பது விவசாயிகளை கொந்தளிப்படையச் செய்துள்ளது.
பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி இந்திய விவசாய சங்கம் சார்பில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். நாடெங்கிலும் இருந்து 4 லட்சம் விவசாயிகள் பங்குபெற்றுள்ளனர். தமிழகத்தை சார்ந்த பல விவசாயிகளும் இந்த போடாட்டத்திற்காக டெல்லிக்கு சென்றுள்ளனர்.
நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்ற போராட்டத்தில் தமிழக விவசாயிகள் திடீரென நிர்வாணப் போராட்டத்தை நடத்தினர். திடீரென துணிகளை அவிழ்த்து ரோட்டில் படுத்து போராட்டம் நடத்தினர். இதனால் அருகிலிருந்த சக விவசாயிகள் கண்கலங்கினர். இந்த போராட்டத்தை பார்த்த மக்களும் கதிகலங்கிப் போனார்கள்.
இதுகுறித்து பேசிய மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விவசாயிகள் நாகரிகமாக போராட வேண்டும். அங்கே போய் தமிழகத்தின் மானத்தை வாங்குகிறார்கள். நியாயமான முறையில் போராடுவதை விட்டுவிட்டு இவ்வாறு கீழ்த்தரமாக நடந்துகொள்வது கடும் கண்டனத்திற்குரியது என கூறினார். இவரின் இந்த கருத்திற்கு விவசாயிகள் மத்தியில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது.