புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (19:14 IST)

”கூட்டணி தர்மத்தினால் மௌனமாக இருக்கிறேன்” ஜெயக்குமார் மீது பொன்னார் ஆவேசம்

அமைச்சர் ஜெயக்குமார் தன்னை பற்றி கூறிய கருத்திற்கு, கூட்டணி தர்மத்தினால் மௌனமாக இருக்கிறேன்” என பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

சமீபத்தில் பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன், “தமிழகத்தில் வன்முறை பெருகிவிட்டது. தீவிரவாதிகளின் பயிற்சிக்கூடமாக மாறி வருகிறது” என எஸ் எஸ் ஐ வில்சன் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்தார். இதனை தொடர்ந்து இதற்கு பதிலளிக்கும் விதமாக ”பொன்.ராதாகிருஷ்ணன் கருத்தை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை” என அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பாஜக அலுவலக கூட்டம் ஒன்றில் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், ”ஜெயகுமார் என்னை பற்றி சில விஷயங்கள் பேசியுள்ளார். கூட்டணி தர்மம் என்பதால் மௌனமாக இருக்கிறேன்” என கூறியுள்ளார்.