1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (15:04 IST)

”யாரோ ரஜினியை தவறாக வழிநடத்துகிறார்கள்”.. செல்லூர் ராஜூ

ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார்.

ரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட விடுதலை கழகத்தினர் கூறி வந்த நிலையில், தான் மன்னிப்பு கேட்க முடியாது என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, “ரஜினியை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள்” என கூறியுள்ளார். மேலும் அவர், “50 ஆண்டுகால பழமையான வரலாற்றை தற்போது பேச வேண்டிய அவசியம் கிடையாது” எனவும் கூறியுள்ளார்.