ஹிஜாப்பை அகற்ற கோரியது சரிதான்: பொன் ராதாகிருஷ்ணன்!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றபோது மேலூரில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணை வாக்களிக்க அனுமதிக்க கூடாது என பாஜக முகவர் ஆவேசமாக கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ஹிஜாபை அகற்ற கோரிய பாஜக முகவரின் செயல்பாட்டில் தவறில்லை என்றும் ஒரு முகவராக அவர் தன்னுடைய கடமையை தான் செய்துள்ளார் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்
மேலும் இதே செயலை வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்கள் செய்திருந்தாலும் அது சரிதான் என்றும் அவர் மேலும் கூறினார். பொன்ராதாகிருஷ்ணனின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது