புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (19:59 IST)

திமுக உள்ளாட்சி தேர்தலுக்கு அஞ்சுகிறது.. பொன்னார் குற்றச்சாட்டு

திமுக நீதிமன்றத்தை அணுகியிருப்பது உள்ளாட்சி தேர்தல் குறித்தான அச்சத்தின் அடிப்படையில் தான் என பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறை செய்யப்படாத வரை உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என திமுக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்த உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து ஊரக பகுதிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் அறிவித்தது.

இந்நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு முறை சரியாக பின்பற்றப்படவில்லை என மீண்டும் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது திமுக. மேலும் திமுகவின் கோரிக்கையை ஏற்று நாளை மறுநாள் உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தவுள்ளது.

இதனை குறித்து பேசிய பாஜகவை சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் “உள்ளாட்சி தேர்தலுக்காக திமுக நீதிமன்றத்தை அணுகியிருப்பது அச்சத்தின் அடிப்படையில் தான்” என குற்றம் சாட்டியுள்ளார்.