ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 27 ஜூன் 2019 (10:55 IST)

திடீர் விஞ்ஞானிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள் – அனு உலைக்கழிவு விஷயத்தில் பொன் ராதாகிருஷ்ணன் கடுப்பு !

கூடங்குளம் அனு உலைக்கழிவுகளை அங்கேயே புதைப்பது தொடர்பாக எதிர்ப்பு தெரிவிக்கும் கட்சிகளை வெளிநாட்டுக் கைக்கூலிகள் என பொன் ராதா கிருஷ்ணன் விமர்சனம் செய்துள்ளார்.

கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளிவரும் உலைக்கழிவுகள் பாதுகாப்பானது என்றும், அதனை அங்கேயே புதைப்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் அரசு தரப்பில் கூறி வரும் நிலையில் அந்த அணுக்கழிவுகளை கூடங்குளத்தில் புதைக்க கூடாது என அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசின் இந்தத் திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளான திமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனுக்கழிவு சம்மந்தமான விளக்கங்களையும் அது மக்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதையும் விளக்கி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து பதில் அளித்துள்ள பொன் ராதா கிருஷணன் ‘ அனு உலை விஷயத்தில் திடீர் விஞ்ஞானிகள் மக்களை ஏமாற்றுகிறார்கள். மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றால் அரசு அத்தகையத் திட்டங்களை மேற்கொள்ளுமா. இவர்கள் அனைவரும் வெளிநாட்டுக் கைக்கூலிகள்’ எனத் தெரிவித்துள்ளார்.