1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: ஞாயிறு, 23 ஜூன் 2019 (11:17 IST)

பாராளுமன்றத்தின் அடியில் அணுக்கழிவுகளை புதைக்கலாமே! சீமான் கொடுத்த ஐடியா!

கூடங்குளம் அணு உலையில் இருந்து வெளிவரும் உலைக்கழிவுகள் பாதுகாப்பானது என்றும், அதனை அங்கேயே புதைப்பதால் எந்தவித பிரச்சனையும் இல்லை என்றும் அரசு தரப்பில் கூறி வரும் நிலையில் அந்த அணுக்கழிவுகளை கூடங்குளத்தில் புதைக்க கூடாது என அந்த பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் அணு உலைக்கழிவுகள் ஆபத்தானது இல்லை, பாதுகாப்பானது என்று கூறுபவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒரு ஐடியாவை கொடுத்துள்ளார். அதாவது அணு உலைக்கழிவுகள் ஆபத்தானது இல்லை என்றால் அதனை பாராளுமன்றத்தின் அடியில் புதைத்துக் கொள்ளுங்கள் ரொம்ப பாதுகாப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார்.
 
மேலும் நாங்கள் விசிறி வைத்து வீசிக்கிறோம், கொசுக்கடியில் இருந்துக்குறோம், மெழுகுவர்த்தி, சீம விளக்கு, மண்ணெண்ணை விளக்கில் கூட வாழ்ந்துக்குறோம். உன் அணு உலையால் வரும் மின்சாரம் எனக்கு தேவையில்லை என்றும் சீமான் கூறியுள்ளார்.
 
சீமானின் இந்த கருத்துக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்டுக்கள் பதிவாகி வருகிறது. அணு உலைக்கழிவுகள் பாதுகாப்பானது இல்லை என்றால் அதை எங்கே ஆபத்து இல்லாமல் புதைக்கலாம் என்று ஆக்கபூர்வமான ஆலோசனைகளை கூறாமல் சீமான் விதண்டாவாதம் செய்வதாக பலர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.