திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 3 மார்ச் 2024 (20:15 IST)

இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்! 56.34 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து! – சுகாதாரத்துறை தகவல்!

Polio Drop Day
இன்று தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட்ட நிலையில் 56 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



குழந்தைகளை போலியோ பாதிப்பு ஏற்படாமல் காக்க போலியோ சொட்டு மருந்து வழங்குவது அவசியமானதாக உள்ளது. இன்று தமிழகம் முழுவதும் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை 43,051 இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்பட்டன.

ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு தலைமை மருத்துவமனை, பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பொது இடங்களில் நடத்தப்பட்ட இந்த போலியோ சொட்டு மருந்து முகாம்களில் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக சுகாதாரத்துறை தமிழகம் முழுவதும் இன்று மொத்தமாக 56.34 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளில் 98.18 சதவீதம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K