Daily Horoscope
✕

ஹெல்மெட்டில் கேமிரா.. சென்னை காவல்துறை எச்சரிக்கை..!

Written By Siva
Updated: ஞாயிறு, 12 மார்ச் 2023 (16:54 IST)
கேமரா பொருத்தப்பட்டுள்ள ஹெல்மெட் விற்பனை அதிகமாகி வரும் நிலையில் சென்னை காவல்துறை இது குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கடந்த சில மாதங்களாக சென்னையில் கேமிரா பொருத்தப்பட்ட ஹெல்மெட் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் இருசக்கர வாகன ஓட்டிகள் இதனை அதிகம் பயன்படுத்துவதாகவும் காவல்துறைக்கு தகவல் வெளியாகி உள்ளது. இதனை அடுத்து விதிமுறைகளை மீறி கேமரா ஹெல்மெட் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது. 
 
ஒரு சில குறிப்பிட்ட பைக்கர்ஸ் அறக்கட்டளைக்கு மட்டுமே ஹெல்மெட்டில் கேமரா பொருத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் முறையான அனுமதி இன்றி கேமரா ஹெல்மெட்டை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
ஒரு சில இளைஞர்கள் பைக் ரேஸ் வீலிங் போன்ற செயல்களில் ஈடுபடும்போது கேமரா ஹெல்ப்பேட்டை பயன்படுத்தி வருகிறார்கள் என்றும் இது குறித்து தகவல் தெரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

அஇபுதமமுக பொதுச்செயலாளர் பதவிலிருந்து சசிகலா நீக்கம் - நடந்தது என்ன?..

4 வழிகளில் வேலைநீக்க நடவடிக்கையை எடுக்கும் முன்னணி நிறுவனங்கள்.. எப்போது வேண்டுமானாலும் வேலை போகலாம்..

ஆங்கிலம் தப்பாக பேசியதால் தாஜ் ஓட்டல் வெயிட்டரை அறைந்த வாடிக்கையாளர்.. அதன்பின் நடந்த ட்விஸ்ட்...

ரயிலில் சார்ஜ் செய்ய புதிய கட்டுப்பாடுகள்!.. காரணம் இதுதான்!..

சேகர்பாபு மீது வழக்குப்பதிவு! - ரவுண்டு கட்டி அடிக்கிறாங்களே!..

அடுத்த கட்டுரையில்
Show comments