பறிமுதல் செய்த சரக்கை சைடு கேப்பில் விற்ற காவலர்கள்! – பணியிடை நீக்கம்!
தஞ்சாவூரில் முறைகேடாக விற்ற மதுபானங்களை பறிமுதல் செய்த காவலர்கள் அதை வேறு நபருக்கு விற்றதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ள நிலையில் மதுக்கடைகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் முறைகேடாக ப்ளாக்கில் மது விற்பனை செய்யும் நபர்களை போலீஸார் பிடித்து வருவதுடன் மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் முறைகேடாக மது விற்பவர்களை பிடித்த போலீஸார் அவர்களிடமிருந்து, 434 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால் அதுகுறித்து வழக்குப்பதிவு செய்யாமல் மது விற்றவர்களை கண்டித்து அனுப்பி விட்டு அந்த மதுபாட்டில்களை வேறு ஒருவரிடம் விற்றதாக தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறை கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட 4 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.