புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: ஞாயிறு, 1 மார்ச் 2020 (11:39 IST)

ரஜினியின் போலீஸ் பாதுகாப்பு வாபஸ்!

ரஜினிக்கும் அவரது வீட்டிற்கும் வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப்பெறப்பட்டுள்ளது. 
 
துக்ளக் விழாவில் ரஜினி பேசிய சில கருத்துக்கள் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. எனவே அவருக்கும் அவரது போயஸ் கார்டன் இல்லத்திற்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பாதுகாப்பு குறித்து காவல்துறை நுண்ணறிவு பிரிவு துணை ஆணையர் திருநாவுக்கரசு ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார். 
 
இந்த ஆலோசனையின் போது ரஜினி தனக்கும் தனது வீட்டிற்கும் வழங்கப்பட்ட பாதுகாப்பை திரும்பபெற்றுக்கொள்ளும் படி கேட்டுள்ளார். இது குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
இதனை தொடர்ந்து ரஜினிகாந்த் இல்லத்தில் நேற்று இரவு வரை பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.