1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (17:12 IST)

ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி: நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் நிறுவனத்தின் 5 பேர் ஆஜர்..!

இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் நிகழ்ச்சியில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்கப்படும் என காவல்துறை தெரிவித்த நிலையில் இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்த நிறுவனத்தின் ஐந்து பேர் காவல் துறை முன் ஆஜராகி விளக்கம் அளித்து வருவதாக தகவல் அறியாகி உள்ளன. 
 
சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சியில் அதிகளவு டிக்கெட் கொடுத்ததால் டிக்கெட் வாங்கிய பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் ஏமாற்றமே கிடைத்தது.
 
 இது குறித்த  சமூக வலைதளங்கள் மூலம் வந்த புகாரியின் அடிப்படையில் தாம்பரம் காவல்துறை ஆணையர் விசாரணை செய்து வருகிறார்.  இந்த விசாரணையின் முதல் கட்டமாக நிகழ்ச்சியை நடத்திய  நிறுவனத்தின் இயக்குனர் ஹேமந்த் உள்பட ஐந்து பேர் ஆஜராகி உள்ளனர் 
 
அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கை நடக்கும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran