புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (13:54 IST)

ஒரே கட்டிடத்தில் பல கோடிக்கு அலுவலகம் வாங்கிய நடிகர், நடிகைகள்

பாலிவுட் சினிமாவுக்கு  உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதேபோல் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர், நடிகைகளுக்கும் உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

பாலிவுட் சினிமா நடிகர், நடிகைகள் சினிமாவில் மட்டுமின்றி விளம்பரங்களின் மூலம் கோடிக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். அந்தப் பணத்தில் அவர் ரியல் எஸ்டேட் துறைகளில் முதலீடு செய்து வருவதாகத் தகவல் வெளியாகிறது.

இந்த நிலையில் பாலிவுட் சினிமா பிரபல நடிகர், நடிகைகள் மும்பையில் ஒரே பகுதியில் பல கோடிக்கு அலுவலகம் வாங்கியுள்ளனர்.

அதாவது, அமிதாப்பச்சன், மும்பை ஓஷிவாரா பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடடத்தின் 21 வது மாடியில் ரூ.21 கோடியில் 4அலுவலகங்களை வாங்கியுள்ள  நிலையில், இதே கட்டிடத்தில், 4வது மாடியில் கார்த்திக் ஆர்யன் ரூ.10 கோடிக்கு ஒரு கட்டிடம் வாங்கியுள்ளார். இதன் 4 அது மாடியில் சாரா அலிகான் தன் தாயுடன் இணைந்து ரூ.9 கோடிக்கு ஒரு அலுவலகத்தையும், நடிகை கஜோல் ரூ.7.64 கோடிக்கு ஒரு கட்டிடத்தை வாங்கியுள்ளனர்.