வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 17 செப்டம்பர் 2022 (09:00 IST)

சங்கரன்கோவில் அருகே தீண்டாமை - போலீசார் விசாரணை

சங்கரன்கோவில் அருகே மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்காமல் திருப்பி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


சங்கரன்கோவிலில் உள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பெட்டிக்கடைக்காரர் ஒருவர், தலித் மாணவர்கள் தின்பண்டங்கள் வாங்க வந்த போது, ஊர் கட்டுபாடு விதித்திருப்பதாகவும் இனிமேல் யாரும் திண்பண்டங்கள் வாங்க வரவேண்டாம், தரமாட்டார்கள் என விட்டில் போய் சொல்லுங்கள் என கூறியுள்ள வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வீடியோ வைரலானதை தொடர்ந்து தீண்டாமை அவலம் குறித்து வழக்கு பதிந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். தின்பண்டம் வழங்க மறுத்தது தொடர்பாக கடை உரிமையாளர், ஊர் நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.