1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 26 டிசம்பர் 2022 (16:20 IST)

ஆயிரம் ரூபாய் கொடுத்தால் உல்லாசம்! ஓப்பனாக விளம்பரம்! – சென்னையில் அதிர்ச்சி!

Police
சென்னையில் விடுதி ஒன்றின் முன்பு வைக்கப்பட்ட டிஜிட்டல் பேனரில் இடம்பெற்ற வாசகங்கள் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

சென்னையில் ஏராளமான கடைகள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் செயல்பட்டு வரும் நிலையில் விளம்பரங்களுக்காக டிஜிட்டல் போர்டுகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சைதாப்பேட்டை சின்னமலை மெட்ரோ ரயில் நிலையம் அருகே உள்ள விடுதி ஒன்றில் வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனர் விளம்பரத்தில் ‘ஆயிரம் ரூபாய் கொடுத்தால் எந்த பெண்ணுடனும் உல்லாசமாக இருக்கலாம்’ என வாசகம் இடம்பெற்றிருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் வெளிப்படையாக விபச்சாரத்தை விளம்பரப்படுத்துவது போல உள்ளதாக விமர்சித்து வந்தனர். இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட விடுதியில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் விடுதி ஊழியர் ஒருவர் அதை திட்டமிட்டு செய்ததாகவும், விடுதியில் தவறான நடவடிக்கைகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Prasanth.K