சூடான் குற்றவாளிக்கு உதவி செய்த சென்னை போலீஸ்!!! குவியும் பாராட்டுக்கள்...
சிறையில் இருந்து வெளியே வந்த சூடான் குற்றவாளி சொந்த நாடு திரும்ப சென்னை போலீஸார் உதவி செய்துள்ளனர்.
சூடான் நாட்டை சேர்ந்த முகமது அல் முஸ்தப்பா என்ற வாலிபர் கடந்த 2013ஆம் ஆண்டு நாடப்பட்டிணம் வந்து அங்குள்ள கல்லூரியில் படித்து வந்தார். 2014ஆம் ஆண்டு தனது சொந்த ஊருக்கு சென்று திரும்பினார்.
பின்னர் தனது கல்லூரி கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்து வந்த அவர், சென்னைக்கு வந்து கிடைத்த வேலைகளை செய்து வந்தார். இப்படியே காலங்கள் ஓடின. கடந்த வருட இறுதியில் மெரினாவில் சுற்றித்திருந்த இவரை அப்பகுதி இளைஞர்கள் தாக்கியுள்ளனர். பதிலுக்கு முஸ்தப்பாவும் அவர்களை தாக்கியுள்ளார்.
இதனையடுத்து போலீஸார் முஸ்தப்பாவை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர். 4 மாத சிறை தண்டனைக்கு பின்னர் வெளியே வந்த அவர், என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தார். இதனையறிந்த காவல் துறையினர், அவருக்கு ஃப்ளைட் டிக்கெட் எடுத்து அவரை ஊருக்கு அனுப்பி வைத்தனர். போலீஸின் இந்த மனிதாபம் பாராட்டுக்களை பெற்று வருகிறது.