ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 1 நவம்பர் 2022 (17:52 IST)

அண்ணாமலை போராட்டம் எதிரொலி: குஷ்புவை அவதூறாக பேசிய திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!

sadhik
அண்ணாமலை போராட்டம் எதிரொலி: குஷ்புவை அவதூறாக பேசிய திமுக நிர்வாகி மீது வழக்குப்பதிவு!
 திமுக நிர்வாகி கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜக நிர்வாகிகளானன குஷ்பு நமீதா காயத்ரி ரகுராம் கவுதமி உள்பட ஒரு சிலரை அவதூறாக பேசிய நிலையில் அவர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய சாதிக் என்பவர் குஷ்பு நமீதா காயத்ரி ரகுராம் கௌதமி உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார் 
 
இதற்கு குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்து இருந்த நிலையில் திமுக எம்பி கனிமொழி அதற்கு வருத்தம் தெரிவித்தார். இந்த நிலையில் சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக மகளிரணி சார்பில் சமீபத்தில் புகார் அளிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் திமுக பேச்சாளர் சாதிக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்று பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை சாதிக் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போராட்டம் நடத்திய நிலையில் போராட்டம் முடிந்த சில மணி நேரங்களில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva