புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 30 மார்ச் 2019 (07:09 IST)

திருமுருகன்காந்தி மீது மீண்டும் வழக்குப்பதிவு: அரசுக்கு எதிராக பேசியதாக குற்றச்சாட்டு

மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தமிழகத்தின் பல பகுதிகளில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது திருமுருகன்காந்தி உள்பட நால்வர் மீது சென்னையிலும் ஒரு புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இதன்படி அரசுக்கு எதிராக பேசியதாக திருமுருகன் காந்தி , டைசன் , பெரியசாமி , அருள்முருகன் ஆகியோர் மீது சென்னை நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்குப்பதிவு குறித்து கூடுதல் விபரங்கள் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்த நிலையில் ‘மே 17’ இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு சிறையில் பாதரசம் கலந்த உணவு வழங்கப்பட்டிருக்கலாம் என்றும், அதன் காரணமாகவே அவருக்கு மிகுந்த உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும் மே 17 இயக்க நிர்வாகிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.