திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 2 ஜனவரி 2019 (15:08 IST)

இதுதான் உங்கள் வெளிப்படைத்தன்மையா? – மோடிக்கு மே 17 இயக்கம் கேள்வி

மோடி நேற்று ஒரு தனியார் ஆங்கில ஊடக நிறுவந்த்திற்கு நேர்காணல் அளித்தார். அந்த நேர்காணலில் அவர் அளித்த பதில்களுக்கு நாடு முழுவதும் இருந்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.

மோடி நேற்று ஏ.என்.ஐ நிறுவனத்திற்குப் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு நேர்காணல் ஒன்றை அளித்தார். அப்போது பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, சபரிமலை விவகாரம், முத்தலாக் சட்டமசோதா ஆகிய பல்வேறு சர்ச்சைகள் குறித்தும் தனது கருத்தினைப் பகிர்ந்துகொண்டார்.

அப்போது பாஜக வின் நான்கரை ஆண்டு ஆட்சியில் மிகவும் வெளிப்படைத் தன்மையோடு நாங்கள் அனைவரும் வெளிப்படைத் தன்மையோடு செயல்பட்டு வருகிறோம் எனக் கூறினார். மோடி கூறிய பாஜக மற்றும் மோடியின் வெளிப்படைத் தன்மைக் குறித்து மே 17 இயக்கம் விமர்சனங்களை வைத்துள்ளது. மோடி ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அவற்றின் வெளிப்படைத் தன்மைக் குறித்து கேள்வியெழுப்பியுள்ளது.

இது குறித்த மே 17 இயக்கத்தின் முகநூல் பக்கத்தில் ‘பொய்யோடு ஆங்கில புத்தாண்டை தொடங்கிய பிரதமர் மோடி:எனது நான்கரை ஆண்டுகால ஆட்சியில் மிகவும் வெளிப்படைதன்மையாக செயல்பட்டிருக்கின்றோம் என்று நேற்று (01.01.19) இந்தியாவிற்கு வருகை தந்த மோடி திருவாய் மலர்ந்திருக்கிறார். எப்படித்தான் இப்படி கூச்சநாச்சமின்றி பொய் சொல்லவருதோ இந்த கும்பல்களுக்கு ..

ஒரே நாளில் இரவோடு இரவாக 500 மற்றும் 1000ருபாய் நோட்டுகள் செல்லாதென்று உங்கள் கேபினடுக்கே தெரியாமல் அறிவிச்சிங்களே மோடி ஒருவேளை அதைத்தான் வெளிப்படைதன்மை என்று சொல்கிறீர்களா மோடி?

இரபேல் விமானத்தை என்ன விலைக்கு பிரான்ஸ்கிட்ட இருந்து வாங்குறோமுன்னு நாட்டு மக்களுக்கு உடனேயில்ல தெரிவிச்சிங்க..உங்கள் வெளிப்படைத்தன்மை தான் நீதிமன்றம் வரைவந்து சிரிப்பா சிரிச்சதே மோடி..

50கோடிக்கு மேல வங்கிகளில் கடன வாங்கிட்டு யாரெல்லாம் திரும்ப கட்டலன்னு ரிசர்வ் வங்கி உடனடியாக வெளியிடனுமுன்னு மத்திய தகவல் ஆணையர்(சிஐசி) போட்ட உத்தரவிற்கு தடைவாங்க உடனடியாக மும்பை நீதிமன்றத்தில் ரிட் மனு போட்டு தடை வாங்கினிங்களே அதுல தெரிஞ்சது உங்களோட வெளிப்படைத்தன்மை.

உங்களுடைய (மோடியுடன்) வெளிநாட்டு பயணங்களின் போது உடன் வந்தவர்கள் யார் யார்? என்ற கேள்விக்கு சொல்ல முடியாதுன்னு சொன்ன வெளிப்படைதன்மையை என்னவென்று சொல்வது..

அதுபோக இதுவரை இந்திய வரலாற்றிலேயே இல்லாதளவுக்கு தகவல் உரிமை சட்டத்தில் குடிமக்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு அரசே அதனை எதிர்த்து 1700ரிட் மனுக்களை பல்வேறு நீதிமன்றங்களில் போட்டு தடை வாங்கிய சிறப்பான வரலாற்றை கொண்டவர் நீங்கள் தானே மோடி..

அரசு நிர்வாகத்தில் நடக்கிறவைகள் மக்களுக்கு தெரியவேண்டுமென்பதற்காக உருவாக்கப்பட்ட பதவிதான் பொது தகவல் அலுவலர் (PIO) என்ற துறை. அந்ததுறை இருந்தால் தானே எனது நிர்வாகத்தி என்ன நடக்கிறதென்று வெளியில் செய்திபோகுமென்று அந்த பதவியையே தூக்கியவர் தான் இந்த வெளிப்படைத்தனமை மோடி...

மக்களை பாதிக்கும் பல்வேறு மசோத்தக்களை நிதிமசோதா என்று கணக்கு காட்டி நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்காமல் நிறைவேற்றினீர்களே மோடி ஒருவேளை அதைத்தான் வெளிப்படைத்தன்மை என்று சொல்கிறீர்களா?

உண்மையை சொல்லப்போனால் இந்தியாவில் எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு ஆட்டூழியங்கள் நடக்கவில்லை. அந்தளவுக்கு அரசு நிர்வாகம் முற்றிலும் வெளிப்படைத்தன்மையற்று மக்கள் விரோதமாக இன்னும் சொல்லப்போனால் சட்டத்திற்கு புறம்பாக மோடி ஆட்சியில் நடந்துகொண்டிருக்கிறது. மேலே சொன்னவை சிலவகைதான் இன்னும் நிறைய இருக்கிறது சொல்லிக்கொண்டே போகலாம் இந்த நான்கரை ஆண்டுகால மோடி நிர்வாகத்தின் காட்டாச்சியை ...’ எனக் கேள்வியெழுப்பியுள்ளது.