வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 8 பிப்ரவரி 2021 (07:31 IST)

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது: காவல் துணை கண்காணிப்பாளர்

அதிமுக கொடியை சசிகலா பயன்படுத்த கூடாது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட போது அதிமுக கொடி உள்ள காரில் வெளியே வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
 
அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா, அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து தற்போது கிருஷ்ணகிரி உட்கோட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் சசிகலா உட்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: தற்போது உள்ள covid-19 மற்றும் சட்டம் ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு காவல் சட்டம் அமலில் உள்ளதால் கீழ் கண்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
திருமதி சசிகலா அவர்களின் வாகனத்தின் பின்பு 5 வாகனங்கள் மட்டுமே பின்தொடர்ந்து வரவேண்டும். அதிமுக கட்சியினர் இதர வாகனங்கள் பின் தொடர்ந்து வர அனுமதி இல்லை. சசிகலா உள்பட யாரும் அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்துவது விதி மீறலாகும். ஒவ்வொரு வரவேற்பு இடத்திலும் அங்கு உள்ள இடத்தில் உள்ள 10 சதவீத அளவு சீருடை அணிந்த தொண்டர்கள் மட்டுமே நிறுத்திக்கொள்ளவேண்டும். பட்டாசு வெடிப்பதற்கும், பேண்ட் வாத்தியங்கள் வைப்பதற்கும் அனுமதி இல்லை. இவ்வாறு அந்த விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளது