திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 5 ஜனவரி 2024 (17:34 IST)

கணவரை தள்ளி விட்ட மனைவி.. எதிர்பாராத உயிரிழப்பு.. விடுவிக்க போலீசார் முடிவு..!

கணவரை மனைவி தள்ளிவிட்ட நிலையில் கணவர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தில் மனைவியை விடுவிக்க போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் மது போதையில் மனைவியை தொடர்ந்து அடித்து கணவர் கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் இருவரும் சண்டை கொண்டிருக்கும் போதும் மனைவியை கணவர் கொடுமைப்படுத்திய நிலையில் மனைவி  கணவரை தள்ளிவிட்டார். 
 
இதனை அடுத்து படுகாயம் அடைந்த கணவர் உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் நிலையத்தில் சரணடைந்த மனைவியை விடுவிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தற்காப்புக்காக தான் கணவரை தள்ளியது உறுதி செய்யப்பட்டுள்ளது 
 
இதனை அடுத்து சட்ட பிரிவு 100ன் கீழ் அவரை விடுவிக்க வழக்கறிஞர்களுடன் ஆலோசனை செய்து வருகின்றனர்.  வீட்டு வேலை செய்து வருமானம் ஈட்டும் அந்த பெண்ணுக்கு  இரண்டு பிள்ளைகள் இருப்பதால் அவர்களுடைய எதிர்காலத்தையும் கணக்கில் கொண்டு அவரை விடுதலை செய்ய போலீசார் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

Edited by Mahendran