செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Updated :சென்னை , வெள்ளி, 22 மார்ச் 2024 (17:45 IST)

சுந்தரா டிராவல்ஸ் ராதா வீட்டின் எதிரில் கஞ்சா புழக்கம்?.. தட்டிக்கேட்டதற்கு தன் மீதும் தன் மகன் மீதும் தவறான புகார்

கடந்த சில மாதங்களாகவே நடிகை ராதா வீட்டின் எதிரில் உள்ள மாடியில் பிரான்சிஸ் என்ற இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் அமர்ந்துகொண்டு நடிகை ராதாவை பார்த்து தவறாக பேசுவதும்,தவறான சைகைகள் காட்டுவதுமாக இருந்துள்ளனர்.
 
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்து FIR பதிவு செய்யப்பட்டது.
 
பிறகு சிறிது நாட்கள் அமைதியாக இருந்த அந்த நபர்கள் மீண்டும் அதே வேலையை தொடர்ந்துள்ளனர்.
 
மேலும் அவர்கள் வீட்டின் மொட்டை மாடியில் அந்த நபர்கள் கஞ்சா பயன்படுத்துவதை கண்ட நடிகை ராதா அதை வீடியோ எடுத்துள்ளார்.
 
அந்த வீடியோவை பிரான்சிஸ் பெற்றோரிடம் காட்டியுள்ளார் இதனால் பிரான்சிஸ்-ன் பெற்றோர் அவரை கண்டித்துள்ளனர்.
 
இதனால் ஆத்திரமடைந்த பிரான்சிஸ்,நடிகை ராதா அந்த பக்கம் செல்லும் போதெல்லாம் தவறான செய்கை காட்டி கிண்டல் செய்வதை தொடர்ந்துள்ளார்.
 
இதுகுறித்து நடிகை ராதாவின் புகாரின் பேரில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் பிரான்சிஸ் மீது FIR பதிவு செய்யப்பட்டது.
 
ஆனால் காவல் துறையினரிடம் சிக்காமல் கடந்த 15 நாட்கள் தலைமறைவாக இருந்துள்ளார் பிரான்சிஸ்.
 
பிறகு தனது பெற்றோர் மூலம் முன்ஜாமீன் பெற்ற பிறகு மீண்டும் வீடு திரும்பியுள்ளார் பிரான்சிஸ்.
 
காவல்துறையிடம் சொன்னாலும் என்னை ஒன்றும் செய்யமுடியாது என்று மீண்டும் தவறான சைகைகளை காட்டி நண்பர்களுடன் மாடியில் கஞ்சா புழக்கத்தை தொடங்கியுள்ளார் பிரான்சிஸ்.
 
இதுபோல் ஒருநாள் இரவில் நடிகை ராதாவிடம் நடுவிரலை காட்டி கிண்டல் செய்துள்ளார் பிரான்சிஸ்.
 
இதனால் ஆத்திரம் அடைந்த ராதா அதே தெருவில் வைத்து அவரை அடித்துள்ளார்.
 
தற்போது தன்னை தாக்கியதாக பிரான்சிஸ் அளித்த புகாரில் நடிகை ராதா மீது விசாரணையை தொடங்கியுள்ளனர் காவல்துறையினர்
 
இதுகுறித்து பேசிய ராதா.. 
 
அந்த பிரான்சிஸ் மீது FIR பதிவு செய்யப்பட்ட அடுத்த நாள் கூட எதுவும் நடக்காதது போல் தெருவில் உலா வருகிறான், கஞ்சா பயன்படுத்தி உள்ளான் அதற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.
 
அவனது சகோதரனால் என் வீட்டின் சிசிடிவி உடைக்கப்பட்டுள்ளது, அவன் மீது FIR பதிவு செய்ய 15 நாள் அலைந்து திரிந்து தான் பதிவு செய்ய வேண்டிய நிலையில் உள்ளது.. உறுதிபடுத்தாமல் என் மகன் அவனை தாக்கியதாக சேர்ந்து சொல்கிறார்கள்.. இப்படி இருந்தால் காவல்துறை மீது எப்படி நம்பிக்கை வரும்? கஞ்சா அடித்து விட்டு பெண்களை கிண்டல் செய்யும் பிரான்சிஸ் போன்ற நபர்களை கைது செய்யாமல் என் மேல் கொடுக்கப்பட்டு இருக்கும் புகாருக்கு விசாரணை செய்வது எந்த விதத்தில் சரியாக இருக்கும்? இது குறித்து காவல் ஆணையரிடம் விரைவில் புகார் அளிக்க உள்ளதாக நடிகை ராதா தெரிவித்துள்ளார்..!