1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வால்பாறை , வெள்ளி, 22 மார்ச் 2024 (15:03 IST)

அரசு பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ள பள்ளி ஆசிரியரின் கணவர் போக்சோ சட்டத்தில் கைது!

வால்பாறை கக்கன் காலனி பகுதியில் பத்தாம் வகுப்பு 11ஆம் வகுப்பு ஸ்பெஷல் கிளாஸ் படித்து வரும் மாணவியரிடம், அப் பள்ளி ஆசிரியரின் கணவன் மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளார்.
 
இதனை தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் காப்பகம் மையத்தில் புகார் அளித்ததான் பேரில், பொள்ளாச்சி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மல்லிகா தலைமையில் வால்பாறை இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார் முன்னிலையில் இன்று போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.
 
பின்பு அவரை கோவை மத்திய சிறைச்சாலையில் அடைத்தனர்.
 
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.