நிதியமைச்சர் பி.டி.ஆர்., கார் தாக்கப்பட்ட விவகாரம்: 6 பேர் கைது!
மதுரையில் தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து காவல்துறையினர் 6 பேரை கைது செய்துள்ளதாகவும் மேலும் 24 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
மதுரை விமான நிலையத்தில் இன்று பி.டி.ஆர்., பழனிவேல் தியாகராஜன் அவர்கள் கார் சென்றபோது பாஜகவினர் வழிமறித்து அவரது கார் மீது செருப்பு வீசிய தெரிகிறது
இதனையடுத்து காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுத்த நிலையில் அமைச்சர் மீது செருப்பு வீசிய விவகாரத்தில் 6 பேரை கைது செய்துள்ளனர் மேலும் 24 பேர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
மேலும் பாஜக மாவட்ட தலைவர் சரவணன் துணை தலைவர் மனோகரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது