புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (20:52 IST)

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறதா? அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி!

anbil
கடந்த சில நாட்களாக 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்பட்டது
 
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யும் வாய்ப்பு இல்லை என்றும் இப்போதைக்கு அப்படி ஒரு திட்டம் அரசுக்கு இல்லை என்றும் தெரிவித்தார். எனவே 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இப்போதைக்கு ரத்து செய்யப்படுவது இல்லை என்பது உறுதியாகி உள்ளது 
 
மேலும் இந்த பேட்டியில் அமைச்சர் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்வு முறையை தமிழக அரசு சிந்திக்க வில்லை என்றும் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்தார்