வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 13 ஆகஸ்ட் 2022 (16:05 IST)

“எனக்கு திருமணமா?....” அசுரன் பட நடிகை அம்மு அபிராமி அளித்த விளக்கம்!

நடிகை அம்மு அபிராமி குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது பங்கேற்று வருகிறார்.

ராட்சசன் மற்றும் அசுரன் ஆகிய படங்களின் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் அம்மு அபிராமி. இப்போது அவர் அருண் விஜய் நடிக்கும் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து வந்தார். இதையடுத்து தற்போது அவர் விஜய் தொலைக்காட்சியின் பிரபல ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் அம்மு அபிராமிக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் பரவிவந்தன. இதுகுறித்து பதிலளித்த அம்மு “எனக்கு இப்போது 22 வயதுதான் ஆகிறது. இன்னும் சினிமாவில் சாதிக்க வேண்டிய நிறைய உள்ளது. அதற்குள் திருமணம் எல்லாம் இல்லை” எனக் கூறப்படுகிறது.