களைகட்டும் குட்கா விற்பனை; போலீஸார் அதிரடி ரெய்டு! – 2,983 பேர் கைது!
தமிழகத்தில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா விற்பனை நடைபெறும் நிலையில் போலீஸார் அதிரடி ரெய்டில் இறங்கியுள்ளனர்.
தமிழகத்தில் குட்கா பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் பல மாவட்டங்களில் சட்டத்திற்கு புறம்பாக குட்கா பொருட்கள் விற்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இது குறித்து கடந்த வாரம் முதலாக தமிழக காவல்துறை அனைத்து மாவட்டங்களிலும் அதிரடி ரெய்டு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 8 நாட்களில் கஞ்சா விற்பனை மற்றும் குட்கா பதுக்கல் தொடர்பாக 239 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 324 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல பல்வேறு மாவட்டங்களில் குட்கா விற்பனை செய்ததாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2,983 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.