செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By siva
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (08:01 IST)

கங்கனா ரனாவத்தை கைது செய்வது எப்போது? மும்பை போலீஸார் தகவல்

சீக்கியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நடிகை கங்கனா ரனாவத் கைது செய்வது எப்போது என்பது குறித்து மும்பை நீதிமன்றத்தில் காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சீக்கியர்கள் குறித்து கங்கனா ரணவத் சர்ச்சைக்குரிய கருத்து கூறியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
 
இந்த வழக்கின் விசாரணை மும்பை நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் இதுகுறித்து மும்பை காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருவதாகவும் எனவே அடுத்த மாதம் 25ஆம் தேதி வரை கங்கனா ரணாவத் கைது செய்ய மாட்டோம் என்றும் மும்பை காவல்துறை சார்பில் வாதாடிய வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார் 
 
இதனை அடுத்து அடுத்த மாதம் 25ஆம் தேதி இந்த வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது