புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : வியாழன், 5 மார்ச் 2020 (15:28 IST)

உணவை மருந்தாக்கு...உடம்பை இரும்பாக்கு - வைரமுத்து ’டுவீட் ’

உணவை மருந்தாக்கு...உடம்பை இரும்பாக்கு - வைரமுத்து ’டிவீட் ’

சீனாவைத் தொடர்ந்து 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. சீனாவில் மட்டுமே 3000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் தென் கொரியா, ஈரான், உள்ளிட்ட நாடுகளில் உயிரிழப்புகள் அதிகமாகி வருகிறது.இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது.
 
இதனிடையே ஐரோப்பா நாடான இத்தாலி நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 109 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அந்நாட்டில் 3,089 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இத்தாலியின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இதனைத் தொடர்ந்து இத்தாலியில் உள்ள அனைத்து பள்ளிகளையும் வரும் 15 ஆம் தேதி வரை மூட அந்நாட்டுக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில், 
உணவை மருந்தாக்கு
உடம்பை இரும்பாக்கு
 
மூச்சுப் பைகளில்
நம்பிக்கை நிரப்பு
நோய்த் தடுப்பாற்றல்
பெருக்குதல் சிறப்பு
 
கோவிட் - 19
கொல்லுயிரியை
எழுந்து எதிர்கொள்
இந்திய நாடே!
#coronavirusindia #CoronaVirusUpdate
என்று கவிதை பதிவிட்டுள்ளார். இந்தக் கவிதை வைரல் ஆகி வருகிறது.