செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (21:31 IST)

உணவு விநியோகச் சேவையில் களமிறங்கும் அமேசான் !

இந்தியாவில் உணவு விநியோகச் சேவையை தொடங்கும் அமேசான் !

A முதல்  Z வரை உலகில் எல்லா பகுதிகளிலும்  ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்துவரும் உலகில் முன்னணி நிறுவனமான அமேசான், உணவு சேவையில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் வெளியாகிறது. 
 
இதற்காக, பெங்களூரில் உள்ள சில உணவகங்களில் இருந்து தங்கள் சோதனை விநியோகத்தை ஆரம்பிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகிறது. கடந்த தீபாவளிக்கு தொடங்குவதாக இருந்த இந்த உணவு டெலிவரி திட்டம் வரும் மார்ச்சில் தொடங்கவுள்ளதாக  அமேசான் தெரிவித்துள்ளது.
 
மேலும், ஏற்கனவே உணவு விநியோகத்தில் உள்ள சுவீக்கி மற்றும் ஊபர் , ஸொமாட்டோ ஆகிய நிறுவனங்களுக்கு அமேசான் போட்டியாக இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.