வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 18 மார்ச் 2024 (08:36 IST)

அதிமுக கொடுத்த துணை முதல்வர் வாக்குறுதி? குஷியில் கூட்டணிக்கு ஒப்புக்கொண்ட பாமக.. அண்ணாமலை அதிர்ச்சி..!

Edappadi Ramadoss
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தால் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி வைக்கலாம் என்றும் அப்போது அதிமுக ஆட்சி அமைத்தால் அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி கொடுக்கப்படும் என்றும் அதிமுக தரப்பில் இருந்து பாமகவுக்கு வாக்குறுதி தரப்பட்டதாகவும் இதனை அடுத்த குஷியான பாமக அதிமுக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரும் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி இன்னும் பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில் பாஜக கூட்டணியில் தான் பாமக இணையும் என்று கூறப்பட்டது. ஆனால் திடீர் திருப்பமாக நேற்று நடந்த பேச்சு வார்த்தையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் அதிமுக ஆட்சி அமைத்தால் அன்புமணிக்கு துணை முதல்வர் பதவி தரப்படும் என்று கூறப்பட்டதை அடுத்து பாமக அதிமுக கூட்டணிக்கு ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.

ஆனால் இது சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தான் என்பதும் அதிமுக மற்றும் பாமக தரப்பிலிருந்து இந்த தகவல் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ அதிமுக கூட்டணியில் பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் இன்று இது குறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

பாமகவை அடுத்து தேமுதிகவும் அதிமுக கூட்டணியில் இணைந்தால் அந்த கூட்டணி வலுவாகிவிடும்  என்றும் கூறப்படுகிறது.


Edited by Siva