Daily Horoscope
✕

எம்ஜிஆரின் மதுரை வீரனை மறக்க முடியுமா? – மதுரையில் பிரதமர் மோடி பேச்சு!

Written By Prasanth Karthick
Updated: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (13:01 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் பரப்புரைக்காக மதுரை வந்த பிரதமர் மோடி எம்ஜிஆர் குறித்து பேசியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் இன்று மதுரையில் நடக்கும் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் ”மதுரை வந்தாரை வாழ வைத்த மண். நூற்றாண்டுகளுக்கு முன்பே சவுராஷ்டிரர்களை இந்த மண் ஏற்றுக் கொண்டுள்ளது. மதுரை மண் காந்தியிடம் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய மண். மதுரை வீரன் என்ற பெயரில் எம்ஜிஆர் நடித்த படத்தை யாராலும் மறக்க முடியுமா” என பேசியுள்ளார்.

மேலும் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும், மேலும் பல தொலைநோக்கு திட்டங்கள் மதுரையில் செயல்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள்!.. பலத்த சோதனைக்குப் பிறகே கோயிலுக்குள் அனுமதி!

பிஸ்லெரி குடிநீர் அருந்துவதற்கு பாதுகாப்பற்றதா? வழக்கு தொடர இந்திய உணவு பாதுகாப்பு ஆணையம் அனுமதி

பெரிய சரிவுக்கு பின் தங்கம் விலை சற்று உயர்வு.. ஆனால் வெள்ளியின் விலை?

இந்தியாவை பார்த்து ஆச்சர்யப்படுகிறேன்!.. அட நம்ம புதினே சொல்லிட்டாரே!...

இன்று முதல் இந்தியாவில் இருந்து நேபாளத்திற்கு ரயில் சேவை.. இருநாட்டு பிரதமர்கள் தொடங்கி வைப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments